சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடும் வெப்பம் விளாசி வந்த தமிழ்நாட்டில் தற்போது வானிலை சட்டென மாறியுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், திருவண்ணாமலை, கடலூர், காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மழை பெய்துள்ளது. தென் மேற்குப் பருவ மழையால் நமக்குக் கிடைத்துள்ள பங்கு என்பது 11 சதவீதம் குறைவேயாகும்.
தற்போது பெய்து வரும் மழையானது தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}