சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பிற்பகலுக்கு மேல் வானிலை மாறிய நிலையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
அக்னிநட்சத்திர காலம் முடிந்தும் கூட தமிழ்நாட்டில் வெயில் மட்டும் ஓயவில்லை. தொடர்ந்து கடுமையாக அடித்தவண்ணம் இருந்தது. சென்னையிலும் வட மாவட்டங்களிலும் சராசரியாக 40 டிகிரிக் செல்சியஸுக்கு மேல்தான் பெரும்பாலான நாட்களில் வெயில் பதிவாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் கடும் வெயில் நாட்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இனி மழை பெய்யும் என்றும் தமிழ்நாடுவெதர்மேன் நேற்று கூறியிருந்தார். சென்னை, ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் இதர மாவட்டங்களில் 24, 25 ஆகிய நாடுகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
நாம இருக்கிறது ஊட்டியா இல்லை சென்னையா என்று கேட்டும் மீம்ஸ் போட்டும் ரகளை செய்திருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னது போலவே இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. லேசான, மிதமான மழையாக இது இருக்கிறது. காற்று பெரிதாக இல்லை. லேசான இடி அவ்வப்போது வந்த போகிறது. இந்த மழை சற்று வலுத்து தொடர்ந்து பெய்தால் வெக்கை முழுமையாக தணிய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கருமேகம் சூழ மழை பெய்து வருவதால் மக்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். பிறகென்ன இளையராஜா பாட்டும் தேநீர்க் குவளைகளும் கூடவே கொஞ்சம் சொஜ்ஜி பஜ்ஜியுமாக இந்த சன்டேவை மக்கள் பிளான் பண்ண ஆரம்பித்துள்ளனர் + மட்டன் சிக்கன் சைட் டிஷ்ஷுடன்!
சரி வந்தது வந்துட்டீங்க.. அப்படியே ஒரு குட்டிக் கவிதையைப் படிச்சுட்டுப் போயிருங்க.. ப்ளீஸ்!
வான் திறந்து
மெல்லிய சாரலாய்
மெல்லச் சொட்டு
என் செல்ல மழைச் சிட்டு
பிறகென்ன
இளையராஜா பாட்டும்
தேநீர்க் குவளைகளும்
கொஞ்சம்
தொட்டுக்க மட்டன் சிக்கனும்!
Happy Sunday மக்களே!
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}