சென்னை : சென்னை ரெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பயணிகளை தேர்வு செய்த அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை மெட்ரோவில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7 லட்சமாக இருந்தது, தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள ஏதாவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களில் பணி புரிவோர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து இந்த இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த பயனாளர்களை அவர்களின் மார்க்கெட்டிங் டீம் தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வுகள் முடிப்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாள் வரை இலவச டிக்கெட்டாக வழங்கப்படும். பிறகு சலுகை விலையில் இந்த டிக்கெட் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தரமாக மெட்ரோவில் அவர்களை பயணம் செய்ய ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்களை மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இந்த டிக்கெட் பயணம் செய்பவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இலவச டிக்கெட் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}