27 மாவட்டங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Nov 15, 2023,11:06 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: 27 மாவட்டங்களில் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியர் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று காலை முதல் சென்னை தலைநகர் உட்பட பல மாவட்டங்களில் விடிய விடிய நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ச்சியாக 26 மணி நேரம் மழை பெய்துள்ளது.


இந்நிலையில் சென்னை எழிலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர்  மு க ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களுடன் அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த மாவட்ட ஆட்சியர், பேரிடர் மீட்பு பணித்துறை, தீயணைப்புத்துறை, தலைமை செயலாளர் ,பல்வேறு தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். 




எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் துரிதமாக எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் 

முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 


ஆட்சியர்களுக்கு உத்தரவு


ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது .எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதற்கு தகுந்தவாறு எவ்வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட தயாரான நிலையில், தற்போது 27 மாவட்டங்களில் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.


கடலூர், விழுப்புரம் ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ,அரியலூர் ,திருச்சி, புதுக்கோட்டை ,திருவாரூர், தஞ்சாவூர் ,நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட  27 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்டத்திற்குரிய ஆட்சியருக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேரிடர்களை சரி செய்வதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் , மீட்பு படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.


மேலும் 13. 11. 2023 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர பகுதிகள்,மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்பதை மீன்வளத் துறையை மற்றும் கடலோர மாவட்ட ஆய்வாளர்கள் வாயிலாக அறிவிப்பு விடுத்திருந்தனர்.


குறிப்பாக கடலூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் கன மழை காரணமாக நிவாரண பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.


மாநில மற்றும் மாவட்ட செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வரும் நிலையில் ,இலவச எண்ணாக மாநில மையத்தை1070 என்ற எண்ணிலும் மற்றும் மாவட்ட மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அவசரகால உதவிகளை பெறலாம். 94 45 86 98 48 என்ற whatsapp எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் எனவும் வருவாய்த்துறை கேட்டு கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்