எதிர்க்கட்சிகள் கூட்டம்.. முட்டிக் கொண்ட காங்கிரஸ் - ஆம்ஆத்மி.. டீ கொடுத்து கூல் செய்த "தீதி!

Jun 24, 2023,09:31 AM IST
பாட்னா : பாஜக.,விற்கு எதிராக ஒன்று கூடிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே உரசல் ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகி விடக் கூடாது என்பதற்காக டீ, பிஸ்கட் சாப்பிட்டு அமைதியாகும்படி சமாதானம் செய்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,விற்கு எதிராக ஒரு அணியாக திரள்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. 



தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய வியூகங்கள், பாஜக.,விற்கு எதிராக மக்களிடம் முன்வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் போது அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது கொண்டு வரப்பட்ட டெல்லி அவசர சட்டம் குறித்து பேசினார். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே பதிலளிக்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அப்போது குறுக்கிட்ட மம்தா பானர்ஜி, டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு இருவரும் அமைதியாகுங்கள். இது போன்ற பிரச்சனைகளை பேசி சண்டையிட்டு கொள்ளும் நேரம் இது கிடையாது. இது பற்றி பேச வேண்டிய இடமும் இது கிடையாது என சொல்லி சமாதானப்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கடந்த கால விருப்பு, வெறுப்புக்கள் பற்றி இங்கு பேச வேண்டாம். அனைத்தையும் மறந்து பாஜக.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக ஒன்று கூட வேண்டும். பாஜக.,வை எதிர்க்க காங்கிரஸ் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

இறுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் துணையாக இருக்கும் என காங்கிரஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்