கர்நாடக முதல்வர்:  சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா?.. இன்று தெரியும்!

May 16, 2023,09:27 AM IST
டில்லி : கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமைய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக முதல்வர் தொடர்பான அறிவிப்பை கட்சி தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ள போதிலும் இப்போது முதல்வரைத் தேர்ந்தெடுக்க கடுமையாக திணறி வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸை மாநிலத்தில் வளர்க்கவும், பாஜகவின் அத்தனை திட்டங்களை தவிடுபொடியாக்கி வெற்றிக்கு இட்டுச் செல்லவும் பெரியஅளவில் உதவியவர் டி.கே.சிவக்குமார்தான். அதேபோல தான் சார்ந்த ஒக்கலிகா சமுதாய வாக்குகளையும் பெரியஅளவில் காங்கிரஸ் பக்கம் திருப்பியவரும் இவர்தான். பாஜகவின் கடுமையான தாக்குதலையும் பொருட்படுத்தாமல், காங்கிரஸை கரை சேர்த்தவர் டி.கே.சிவக்குமார் என்பதில் சந்தேகமே இல்லை.



மறுபக்கம் முன்னாள் முதல்வர் சித்தராமையா. இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு பெயர் உள்ளது. அனுபவம் வாய்ந்தவர், ஏற்கனவே முதல்வராக இருந்தவர், நிர்வாக நெளிவு சுளிவு தெரிந்தவர், அனைவரையும் அனுசரித்துப் போகக் கூடியவர் என்பதால் இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. சித்தராமையாவும் கூட முதல்வர் பதவி விட்டுத் தரத் தயாராக இல்லை.

இப்படி இருவரும் போட்டி போடுவதால் மேலிடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்து முடிந்துள்ளன. மேலிடம் சார்பிலும் சில  தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து இன்று டி.கே.சிவக்குமார் டெல்லி செல்கிறார். அவருடனும் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரிய வரும். அனேகமாக டி.கே.சிவக்குமாரே முதல்வராவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக போல் நேற்றே சிவக்குமார் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார். தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டில்லி செல்லவில்லை என்றும், தேவைப்பட்டால் கட்சி தலைமை தன்னை அழைக்கட்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு சித்தராமைய்யாவிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது சிவக்குமார் இன்று டெல்லி வருவார் என்று அவரது தம்பி டி.கே.சுரேஷ் கூறியுள்ளார். இவர் எம்.பியாக உள்ளார். 

முன்னதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களை அழைத்து தனித்தனியாக கருத்து கேட்டது காங்கிரஸ் தலைமை. எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களின் அறிக்கை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சித்தராமைய்யாவும் கட்சி தலைவரை சந்தித்து விட்டு வந்தார்.

எம்எல்ஏ.,க்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை செய்து 24 மணி நேரத்திற்குள், அதாவது இன்று கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்