வேகம் பிடிக்கும் பிபர்ஜாய் புயல்..  குஜராத், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

Jun 10, 2023,10:37 AM IST
திருவனந்தபுரம்: அதி தீவிரப் புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு பகுதியில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலின் காரணமாக குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடற்கரைப் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரேபியக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலானது தற்போது அதி தீவிரமான புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. குறிப்பாக வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடல் பகுதி கொந்தளித்துக் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைக்குப் பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு செய்துள்ளது. 

குஜராத் தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்