சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையே அதிமுகவினர் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 29 ம் தேதியான இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்களை சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், எடுப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார். விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு தேமுதிக சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரிஜினல் எம்ஜிஆருக்குப் பிறகு, கருப்பு எம்ஜிஆர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இப்போது எடப்பாடி பழனிச்சாமிய எம்ஜிஆராக்கி அழகு பார்த்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.. இனி எம்ஜிஆர் வேடத்தில் எடப்பாடியை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பும் கூட மக்களுக்குக் கிடைக்கலாம்.. இந்த சூழலில்தான் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த்.. புது எம்ஜிஆருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}