மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா...அடுத்த 2 வாரங்களுக்கு கவனமா இருங்க

Apr 13, 2023,10:52 AM IST
புதுடில்லி : நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கவனமாக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒமைக்ரானின் உருமாறிய வடிவமான XBB.1.16 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நேற்று 7000 என்ற அளவில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இன்று 10,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக அதிகரித்துள்ளது.  



கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழிர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி ��ெய்யப்பட்டதை அடுத்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்