சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை 8
மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமையன்று 13 மாவட்டங்களுக்கும் கன மழை
எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்
மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது
மேலும் மேற்கு தென் மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில்
நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு நிலையானது, நாகப்பட்டனத்திற்கு 470
கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது.
இது மேற்கு தென் மேற்கில் தொடர்ந்து நகர்ந்து 25ம்
தேதி காலை இலங்கைக் கரையை நெருங்கும். 26ம் தேதி காலை இது குமரி முனையை
நெருங்கி வரும். இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 25 மற்றும்
26 ஆகிய தேதிகளில் பரவலாக பல இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
25ம்
தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால்
பகுதியிலும் பரவலாக கன மழையை எதிர்பார்க்கலாம்.
.jpg)
26ம் தேதி தேனி,
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழையை
எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}