"கடைசில மண்டை ஓடு கூட மிஞ்சாது".. செல்வராகவன் ரொம்ப டென்ஷனா இருக்காரே

May 25, 2023,02:34 PM IST
சென்னை: அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.. அதாவது சினிமாக்களில் சின்னச் சின்னதாக  முக்கியமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குநராக ஜொலித்த காலத்தைப் போலவே இப்போது அவர் நடிகராகவும் அசத்திக் கொண்டிருக்கிறார்.



பீஸ்ட் படத்தில் ஹீரோ விஜய் கேரக்டருக்கு நிகராக இவரதது கேரக்டரும் ரொம்பவே பேசப்பட்டது. அதேபோல இவரை ஹீரோவாக வைத்து பகாசுரன் படமும் வெளியானது. இந்த நிலையில் அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் இப்போது சமூக வலைதளமான டிவிட்டரில் தொடர்ந்து வித்தியாசமான தத்துவங்களைச் சொல்லி ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

சமீபத்தில், "உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள்" என்று தத்துவம் சொல்லியிருந்தார்.

இல்லாத மரியாதையை தேடாதீர்கள் என்று சமீபத்தில் ஒரு வரியில் உண்மையை உரசி விட்டுச் சென்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.  அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை. என்று தன்னம்பிக்கை ஊட்டியிருந்தார்.

அதேபோல, அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை  என்று லவ் சிம்பல் போட்டிருந்தார். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமியும் வந்து உடனே பதில் போட்டார்.. அவர் கூறுகையில், காதலை மனம் திறந்து சொன்னால் ஒரு காதல் பரிசாக உண்டு. அதற்கு வாழ்த்துகிறேன். இக்கருத்தை சிலாகித்தேன்
செல்வா சார் என்று பாராட்டியிருந்தார்.

இப்படி மணி சாருக்கு அடுத்தபடியாக செல்வா சார் கருத்துக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இன்று இன்னொரு வித்தியாசமான கருத்தைப் போட்டுள்ளார் செல்வராகவன். அதுதான் இது... "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்"

உண்மைதானே!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்