பழனி முருகன்- ஆண்டி கோலத்தில் இருக்கும் துறவியா ?

Feb 09, 2023,01:19 PM IST
பழனி : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக விளங்குவது திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி திருக்கோவில். இங்கு முருகப் பெருமானுக்கு தினமும் ஆறு முறை அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். ஒருமுறை அபிஷேகம் முடிந்து, அலங்காரங்கள் செய்யப்பட்ட பிறகு, அடுத்த அபிஷேகம் நடைபெறும் வரை முருகனுக்கு மாலை, அர்ச்சனை என எதுவும் நடைபெறாது.



காலையில் உதய மார்த்தாண்ட பூஜையின் போது முருகப் பெருமான் துறவி போன்ற அலங்காரத்தில் காட்சி தருவார். அப்போது மூலஸ்தானத்தில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு முருகன் பூஜை செய்வதாக ஐதீகம். அதற்கு பிறகு ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம் என மாறி மாறி பக்தர்களுக்கு காட்சி தருவார் முருகப் பெருமான். இதில் "முருகனை ராஜ அலங்காரத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டும். அப்போது தான் செல்வ வளம் பெருகும். ஆண்டிக் கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகி விடுவோம். அதனால் காத்திருந்து மீண்டும் ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசித்த பிறகே திரும்ப வேண்டும்" என்ற தவறான கருத்து பலரிடமும் நிலவி வருகிறது.

உண்மையில் அது ஆண்டிக் கோலம் கிடையாது. நம்மை ஆண்ட திருக்கோலம். ஆண்டியோ, அரசாளும் ராஜாவோ இருவருமே இறைவனுக்கு முன்பு ஒன்று தான் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே இந்த கோலம். அறுபடை வீடுகளிலே பழனி மட்டுமே, முருகப் பெருமான் தானாக விரும்பி வந்து அமர்ந்த தலமாகும். 

மற்ற எந்த முருகனின் தலத்திலும் இல்லாத விசேஷ வைபவம் ஒன்று பழனியில் நடைபெறும். தினமும் இரவு வெள்ளி பல்லக்கு ஒன்று சுவாசியின் கருவறை முன்பு கொண்டு வந்து வைக்கப்படும். சுவாமி தன்னதியில் இருந்து முருகனின் திருப்பாத கவசங்கள் எடுத்து வரப்பட்டு, பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டு, பள்ளியறைக்கு கொண்டு சென்று வைக்கப்படும். அங்கு வள்ளி, தெய்வானை அமர்ந்திருப்பார்கள். மற்ற நாட்களில் வெள்ளி பல்லக்கு வரும் என்றாலும், கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம் போன்ற முக்கிய நாட்களில் தங்க பல்லக்கில் முருகனின் பாத கவசங்கள் வைத்து பள்ளியறைக்கு கொண்டு செல்லப்படும்.

அங்குள்ள ஊஞ்சலில் சுவாமியின் பாதங்கள் வைக்கப்பட்டு, அன்றைய நாளுக்கான வரவு- செலவுகள் பற்றிய விபரங்கள் படித்து காண்பிடிக்கப்படும். அதன் பிறகே பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு, கோவில் நடை சாற்றப்படும். இங்கு முருகனே சிவ ரூபமாக காட்சி தருகிறார் என்பதற்கு இதுவே சாட்சி. சிவ ஆலயங்களில் மட்டுமே இரவில் நடக்கும் பள்ளியறை பூஜை, பழனியிலும் நடைபெறுவது தனிச்சிறப்பு.

குடும்ப தலைவன் தினமும் இரவில் அன்றைய நாளுக்கான வரவு -செலவுகளை சரி பார்ப்பது போது, முருகனிடமும் வரவு-செலவு ஒப்படைக்கப்படுகிறது. இங்கு முருகன் ஆண்டியாக இல்லாமல் சம்சாரியாகவே காட்சி தருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்