நியூயார்க் : அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலன் மஸ்க்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு, இந்தியாவில் ஸ்டார்லிங்க்க சேவையை வழங்க தான் திட்டமிட்டுள்ளதாக மோடியிடம், எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் புறநகர் கிராமப்புறங்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் என்பது செயற்கைகோள் இணைய வசதியாகும். இது எலன் மாஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். குறைந்த டேட்டா பயன்பாட்டில் அதிக வேகமான இன்டர்நெட் வசதியை வழங்குவது தான் இந்த நோக்கமாகும். உலகின் எந்த மூலை முடுக்கிலும் இந்த நெட்வொர்க் கவரேஜை பெற முடியும். பூமியின் கீழடுக்கு நீள்வட்ட பாதையில் இயங்கும் சிறிய செயற்கைகோள்களின் மூலம் துல்லியமான நெட்வெர்க்கை பெற செய்வது இதன் தனிச்சிறப்பாகும்.
நெட்வொர்க் சிக்னல் பயணிக்கும் நேரம் மிகக் குறைவாக இருப்பதால், அதிக வேகமான இன்டர்நெட் சேவை அனைவருக்கும் சாத்தியமாகும். ஆன்லைன் கேம், வீடியோ கான்ஃபிரன்ஸ் போன்ற அனைத்து மொபைல் ஆப்களுக்கும் இதை பயன்படுத்த முடியும். பாரம்பரிய இன்டர்நெட் உள்கட்டமைப்புக்களைப் போன்று இதற்கு எந்த வரையறையும் கிடையாது. இதனால் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் புறநகர் கிராமத்திற்கும் இன்டர்நெட் சேவை துல்லியமாக கிடைக்கும்.
வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்டர்நெட் சேவை என்ற பிரச்சனைக்கு இது மிகப் பெரிய தீர்வாக இருக்கும். செயற்கைகோள்களை அடிப்படையாக கொண்டு இன்டர்நெட் சேவை வழங்கப்படுவதால், சிக்னல் தடைபடுவதற்கான வாய்ப்பு இதில் இல்லவே இல்லை.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}