ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணம்

Jan 04, 2023,03:02 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான திருமகன் ஈ.வெ.ரா., மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு வயது 46. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈவெரா.,வின் கொள்ளு பேரனும் ஆவார். 

திருமகன் ஈவெரா, முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனவர் ஆவார்.  ஈரோடு(கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.




இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள கேஎம்சிஹச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

திருமகன் ஈவெராவின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் எம்எல்ஏ திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்