"ஜவான் காப்பி".. என்னாது அட்லீ கையில் ஜெராக்ஸ் மெஷினா..!

Jul 10, 2023,03:44 PM IST
சென்னை: ஜவான் படத்தின் டிரெய்லரை வைத்து டிவிட்டரில் இயக்குநர் அட்லீயை செமையாக ஓட்டிக் கொண்டுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம்தான் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சிறப்பு பாத்திரத்தில் தீபிகா படுகோன் வருகிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.



இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. மிகப் பிரமாண்டமாக காட்சி தரும் டிரெய்லரைப் பார்த்தாலே, படம் வேற லெவலில்இருக்கும் என்று இந்தி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளனர்.

ஆனால் நம்மாளுங்க டிவிட்டரில், இந்த டிரெய்லரில் வரும் சில காட்சிகளை தூக்கித் தனியாகப் போட்டு இதெல்லாம் காப்பி என்று வெளுத்து வாங்கி வருகின்றனர்.  அட்லீ படமாச்சே இந்த அளவுக்கு கூட காப்பி இல்லாவிட்டால் எப்படி என்று அவரது விமர்சகர்களும் நக்கலடித்து வருகின்றனர்.



அதாவது பாகுபலி 2 படத்தில் குழந்தையைத் தூக்கிப் பிடிக்கும் காட்சி, அந்நியன் படத்தில் வரும் விக்ரமின் முக கெட்டப்,  டார்க்மேன் கெட்டப், சிவாஜி படத்தில்வரும் ரஜினியின் மொட்டை கெட்டப்.. கட்டக் கடைசியாக வலிமை படத்தில் வரும் பைக் காட்சி என இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து ஓட்டிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

இதில் ஒரு ரசிகர் ஓடி வந்து.. ப்ரோ.. மூன்னைட் காட்சியையும் விடலை என்று அந்தப் படத்தின் ஸ்டில்லையும் கொண்டு வந்து போட்டு கலாய்த்துள்ளார்.



இந்த கிண்டல்களையெல்லாம் பார்த்து ஒருவர் விடுங்க சார்.. நம்ம பையன்.. அவருக்குத் தெரிஞ்சது பண்றாரு என்று சப்போர்ட் செய்வது போல சந்தில் சிந்து பாடி விட்டுப் போயுள்ளார்.

ஆக, மொத்தம் படம் ரிலீஸாகும்போதுதான் அது "எந்தெந்தப் படம்" என்பது முழுமையாக தெரியும் போல.. பார்ப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்