கலக்குறீங்களே மேடம்.. காவாலாவுக்கு ரஜினி கூட இப்புடி ஆடலியே!

Jul 14, 2023,09:25 AM IST
சென்னை : ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடிகை பாத்திமா பாபு நடனமாடி போட்டுள்ள ரீல்ஸ் வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி, தமன்னா நடித்துள்ள படம் ஜெய்லர். இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஜூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக காவாலா பாடல் வெளியிடப்பட்டது. ரஜினி, தமன்னா இணைந்து நடனமாடி உள்ள இந்த பாடல் தான் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்தப் பாடலுக்கு விதம் விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

விமர்சனங்கள், பாராட்டுக்கள் என அனைத்தும் கலந்து வந்து கொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலரும் இந்த பாடல் பற்றிய தங்களின் கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். பீஸ்ட் படத்தில் விஜய்யை காலி செய்த நெல்சன் இந்த முறை ரஜினியின் இமேஜை டேமேஜ் பண்ணி விட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் " ரஜினி இருக்கிறார்" அவ்வளவுதான் என்பது அவர்களது எண்ணம்.

அதேசமயம் இந்த காவாலா பாடலுக்கு ஒவ்வொரு நடிகையும் ஆடினால் எப்படி இருக்கும் என்பதை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக மாற்றி சிம்ரன் உள்பட பல பிரபலங்கள் ஆடுவத��� போல வடிவமைத்தும் சிலர் உலா விட்டுள்ளனர். அது இன்னும் பிரமாதமாக பேசப்படுகிறது

இந்த நிலையில், அனிருத் இசையமைத்துள்ள காவாலா பாடலுக்கு நடிகை பாத்திமா பாபு தற்போது நடனமாடி ரீல்ஸ் போட்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை ரசித்து நெட்டிசன்கள் பலர் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். இந்த வீடியோவிற்கு பிறகு பாத்திமாவை ஃபாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "காவாலா பாடலுக்கு ரஜினி கூட இப்படி ஆடலியே"னு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை, பெரிய திரையில் கலக்கி, அப்படியே அரசியலுக்கும் சென்று, கூடவே பிக் பாஸ் வீட்டுக்கும் போய் கலக்கியவர் பாத்திமா பாபு. இவரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகி விட்டார். தற்போது சோஷியல் மீடியாவில் செம பிஸியாகி விடாமல் வீடியோ போட்டு லைகுகளை அள்ளி வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்