சென்னை : சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறை திரியோதசி நாளில் வரும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இது தேவர்களையும், அசுரர்களையும் விரட்டியது. விஷத்திடம் இருந்து தப்பிப்பதற்காக கைலாயத்தை சுற்றி இங்கும், அங்குமாக ஓடி இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களை காப்பதற்காக அந்த விஷத்தை குடித்தார் சிவ பெருமான். தேவர்கள் கைலாயத்தை வலம் வந்த முறைக்கு சோமசூக்த முறை என்று பெயர். இந்த முறையிலேயே சிவாலயங்களில் வலம் வர வேண்டும் என்பது நியதி.
மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
ஆனால் விஷத்தை விழுங்கினால் தனக்குள் இருக்கும் உயிர்கள் இறந்து விடுமே என நஞ்சினை கண்டத்தில் நிறுத்தில், நீலகண்டராக காட்சி அளித்தார் சிவ பெருமான். தங்களை காப்பாற்றிய சிவ பெருமானை தேவர்கள் பூஜை செய்து வழிபட்ட காலமே பிரதோஷ காலமாகும். இந்த நாளில் விரதமிருந்து நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமான பாவங்களும், தோஷங்கள் விலகி, துன்பம் இல்லாத நல்வாழ்வு கிடைக்கும்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என அழைக்கின்றோம். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களில் கலந்து கொண்ட பலனை, ஒரு சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பெறலாம். பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவ பெருமானையும் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சிவ நாமம் சொல்லி விட வழிபட கேட்ட வரங்கள் அனைத்தையும் ஈசன் அருள்வான்.
சனிப்பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டால் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு பல மடங்கு பலனை தரும். பிரதோஷ விரதம் பிறப்பே இல்லாத முக்தி நிலையை கொண்டுக்கும் என புராணங்கள் சொல்கின்றன.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}