செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்...3வது நீதிபதியை நியமித்தது சென்னை ஐகோர்ட்

Jul 05, 2023,12:50 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மற்றும் அவர் தொடர்பான விவகாரத்தில் தினமும் ஒரு புதிய மாற்றம், புதிய உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தனது அமலாக்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் காவலில் உள்ளார். இந்நிலையில் அவரது நிலை பற்றி அறிய செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுறுத்தல் வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்