நான் பொறுப்பானவன்.. முதுகில் குத்த மாட்டேன்.. மேலிடம் சொல்வதை கேட்பேன்.. டி.கே.சிவக்குமார்

May 16, 2023,05:10 PM IST
பெங்களூரு: நான் பொறுப்பானவன். முதுகில் குத்தும் பழக்கம் எனக்கு இல்லை. கட்சி மேலிடம் என்ன சொன்னாலும் அதைத் தட்டாமல் கேட்பேன் என்று கூறியுள்ளார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் விரைவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.



டெல்லி கிளம்புவதற்கு முன்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் முதுகில் குத்தும் வேலையிலோ அல்லது பிளாக்மெயில் செய்யும் செயலிலோ ஈடுபட மாட்டேன். எந்த முடிவாக இருந்தாலும் கட்சி சொல்வதை நான் கேட்பேன். நான் பொறுப்பான மனிதன்.. வரலாற்றின் தவறான பக்கத்தில் நான் இடம்பெற விரும்பவில்லை. கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் நான் ஏற்பேன்.

எங்களுடையது ஒற்றுமை நிறைந்த வீடு.  எங்களிடம் 135 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். அங்கு பிரிவினை கிடையாது, பிரிவினை வருவதையும் நான் விரும்ப மாட்டேன். அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ நான் பொறுப்பானவனாக இருக்க விரும்புகிறேன்.

கட்சிதான் எனக்குக் கடவுள். இந்தக் கட்சியை கஷ்டப்பட்டு  பலப்படுத்தியிருக்கிறோம், உருவாக்கியிருக்கிறோம்.. அதில் நானும் ஒரு அங்கம்.  ஒரு தாய் தனது எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரிதான் பாசம் காட்டுவாள்.

20 எம்.பி. சீட் டார்கெட்

இதற்கு முன்பு நடந்தது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நடந்தது நடந்ததுதான். அது முடிந்து போனது. இப்போது நாங்கள் புதிய அரசமைக்க உள்ளோம். முன்பு நடந்த கூட்டணி ஆட்சிகள் குறித்து நாம் பேசிப் புண்ணியம் இல்லை. இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளோம்.  இனி எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.

அடுத்து  நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 20 சீட்டுகளை வெல்வதுதான் எங்களது முன்பு உள்ள அடுத்த சவால்.  ஒற்றுமையாக இருந்து அதையும் சாதிப்போம்.  சோனியா காந்தி எங்களது ரோல்மாடல். எல்லோருக்கும் காங்கிரஸ்தான் குடும்பம். நமது அரசியலமைப்புச் சட்டம் எல்லாவற்றையும் விட முக்கியமானது.  அதை அனைவரும் இணைந்து காக்க வேண்டும் என்றார் டி.கே.சிவக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்