இப்பவே எகிறுதே.. "மோடி" மைதானத்தில் வைத்து "குஜராத்"தை வீழ்த்துமா "சென்னை"?

May 27, 2023,09:38 AM IST
அகமதாபாத் : ஐபிஎல் 2023 குவாலிஃபயர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி  படு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அங்கு அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிதான் நடப்பு சாம்பியன் ஆகும். தொடர்ச்சியாக 2வது முறையாக அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் மோதவுள்ளது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், குவாலிபயர் 1 போட்டியில் சென்னையுடன்தான் குஜராத் மோதி தோல்வியுற்றது. இதற்கு இறுதிப் போட்டியில் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி மீண்டும் வென்று பட்டையைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



ஐபிஎல் 2023 டுவென்டி - 20 தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை தேர்வு செய்வதற்கான குவாலிஃபயர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பிளேஆஃப் சுற்றில் சென்னை, மும்பை, குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின.

முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக முன்னேறியது. அடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி வெளியேறியது.  இதைத் தொடர்ந்து மும்பை அணி குவாலிபயர் 2க்கு முன்னேறியது. அங்கு குஜராத்தும், மும்பையும் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மும்பை அணி படு தோல்வி அடைந்தது.

முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில் போட்ட அபாரமான சதத்தால் 233 ரன்களைக் குவித்தது. கில் 129 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார். இந்த தொடரில் அவர் போட்ட 3வது சதமாகும் இது.  குஜராத் அணி வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 233 ரன்களைக் குவித்தது. இதையடுத்து சேசிங்கைத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் வீழந்தார்.  காமரூன் கிரீன் 30,  திலக் வர்மா 43 ரன்களைச் சேர்த்தனர். சூர்ய குமார் யாதவ் அதிரடியாக  ஆடி 62 ரன்களைக் கொடுத்தார்.  வேறு யாருமே இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. இறுதியில்,  171 ரன்களில் ஆல் அவுட் ஆனது மும்பை இந்தியன்ஸ். தங்களது அணி இப்படி அநியாயமாக தோற்றதை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. பலர் கண்ணீர் விட்டு அழுதனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். மே 28 ம் தேதி அதாவது நாளை நடக்க உள்ள ஐபிஎல் பைனல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு ஐபிஎல் 2023 தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி நடைபெறும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற  உள்ளது குறிப்பிடத்தக்கது.

"மோடி" மைதானத்தில் வைத்து "குஜராத்"தை வீழ்த்துமா "சென்னை".. பொறுத்திருந்து பார்ப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்