சிஎஸ்கே. க்கு விசில் போடு.. குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி "சூப்பர்"!

May 24, 2023,09:05 AM IST
சென்னை : ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் Qualifier எனப்படும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 2023 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. பிளேஆஃபிற்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றன. இந்த 4 அணிகளில் பைனலுக்கு செல்ல போகும் இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது தொடங்கியுள்ளன.



நேற்று நடைபெற்ற முதல்வர் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி.

குஜராத் அணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த போதிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 சீசனில் குஜராத் அணியை முதன் முறையாக சென்னை அணி வீழ்த்தி உள்ளது. 

குஜராத்திற்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக அளவாக, அதாவது 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. 6 இறுதிப் போட்டிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்தில் உள்ளது. சென்னை பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றியை அந்த அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்