சிஎஸ்கே.,வுக்கு இப்படியா சோதனை வரணும்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Apr 13, 2023,03:23 PM IST
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் பெற்ற தோல்வியின் அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், இன்று அடுத்த அதிர்ச்சி தகவலை அந்த டீம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. இதில் சென்னை அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இருந்தாலும் தோனி அடித்த 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியே தங்களுக்கு ஆறுதலாக உள்ளது என ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டு உள்ளனர்.



இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 3 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி நடப்பதற்கு கூட சிரமப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் மகாலாவுக்கும் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிளெமிங் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக மகாலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு இப்படியா ஒரு சோதனை வர வேண்டும் என ரசிகர்கள் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்