ஐபிஎல் 2023 பைனல் மழையால் தள்ளிவைப்பு.. சென்னை - குஜராத் இன்று  மோதல்!

May 29, 2023,09:30 AM IST
அகமதாபாத் : ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று ரத்தாகி இன்று நடைபெறவுள்ளது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி மே 28 ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. இரவு 07.30 மணிக்கு போட்டி துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை வந்து விட்டது. 



இரவு 07.30 மணிக்கு போட வேண்டிய டாஸ் 09.30 ஆகியும் போடப்படவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால், மழை ஓய்ந்த பிறகு போட்டி துவங்கப்படும் என அம்பயர்கள் அறிவித்தனர். ஆனால் கொஞ்சமும் கேப் விடாமல் கனமழை பெய்தது. 09.30 மணியளவில் சிறிது மழை குறைந்ததால் இன்னும் சற்று நேரத்தில் டாஸ் போட்டு, போட்டி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீண்டும் மழை பெய்ய துவங்கியது. 

ஐபிஎல் விதிகளின் படி, இறுதிப் போட்டியின் போது மழை அல்லது வானிலை சரியில்லை என்றால் மற்றொரு நாள், அதாவது அடுத்த நாள் அந்த போட்டியை நடத்த வேண்டும். ஒருவேளை ஒத்திவைக்கப்பட்ட அந்த நாளிலும் மழை போன்ற வானிலை பாதிப்புக்கள் குறுக்கிட்டால், பைனலுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளும் லீக் சுற்று போட்டிகளில் எடுத்த புள்ளிகளின் அடிப்படையில், யார் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார்களோ அவர்களுக்கு கோப்பை வழங்கப்படும்.

ஐபிஎல்.,ன் இந்த விதிப்படி பார்த்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதனால் இன்று நடைபெறும் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் சென்னை அணியின் கோப்பைக் கனவு தகர்ந்து போய் விடும், குஜராத் டைட்டன்ஸ் மீண்டும் கோப்பையை தக்க வைக்கும்.

ஆனால் இன்று வானிலை நன்றாக இருக்கும் என அம்பயர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற வேண்டிய ஐபிஎல் 2023 பைனல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாமல் முழுவதுமாக 20 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்