சீனாவை பின்னுக்குத் தள்ளி.. உலகின் நம்பர் 1 நாடானது இந்தியா.. மக்கள் தொகையில்!

Apr 19, 2023,02:22 PM IST

நியூயார்க் : உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சீனாவை விட இந்தியாவில்  ஏறக்குறைய 3 மில்லியன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக ஐநா. கூறியுள்ளது.

2023 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த புள்ளி விபர அறிக்கையை ஐநா.,வின் UNFPA வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86  கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கிறது. 34 கோடி மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.



சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும் என முன்பே ஐநா கூறி இருந்தது. ஆனால் சரியான புள்ளி விபரம் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது எத்தனை மில்லியன் அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள்தொகையை துல்லியமாக கணக்கிடுவது முடியாத காரியம் என ஐநா தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதை சரியான நேரத்தில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும், சீனாவிலும் எதிர்பார்த்ததை விட மூன்றில் ஒன்று பங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை முதல் முறையாக சரியாக துவங்கியது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்