அருணாச்சல் மாநில ஊர்களின் பெயரை மாற்றிய சீனா.. பதிலடி கொடுத்த இந்தியா

Apr 04, 2023,04:20 PM IST
புதுடில்லி : அருணாச்சல பிரதோசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதை ஏற்க இந்தியா மறுத்துள்ளது. இது வழக்கமாக நடப்பது தான் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டை அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா நடத்தியது. இதில் கலந்து கொள்ளாமல் சீனா புறக்கணித்தது. இந்த மாநாடு முடிந்த ஒரு வாரத்திலேயே அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா அறிவிப்பு வெளியிட்டது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பங்சி, நாங்களும் அந்த அறிவிப்பை பார்த்தோம். இப்படி சீனா செய்வது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதை இந்தியா ஒரு போதும் ஏற்காது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி தான். இவர்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கும் பெயர்களால் உண்மையான பெயரை மாற்றி விட முடியாது. இவர்கள் வைக்கும் பெயர்களை எல்லாம் யாரும் ஏற்க போவதில்லை. உண்மையை இவர்களால் மாற்ற முடியாது என்றார்.

அருணாச்சல பிரதேசத்தின் இரண்டு ஆறுகள், ஐந்து மலை சிகரங்கள், இரண்டு குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 11 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்தது. இதற்கு முன் 2017 ல் ஆறு இடங்களின் பெயர்களை மாற்றியும், 2021 ல் 15 இடங்களின் பெயர்களையும் மாற்றி அறிவித்தது சீனா.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்