ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே!

May 18, 2023,01:15 PM IST
சென்னை : சென்னையில் நடைபெற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக் கடட்த்தை நெருங்கி வருகிறது. இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இதில் பிளே ஆஃப் போட்டிகள் மே 23 ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 3 போட்டிகளில் ஏற்கனவே முதல் போட்டி நிறைவடைந்து விட்டது. இதில் வெற்றி பெற்று, முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.



பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள 3 இடங்களை கைப்பற்ற ஏழு அணிகள் போட்டி களத்தில் உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் களத்தில் உள்ளன. 

புள்ளிகளின் அடிப்படையிலான தர வரிசை பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன.மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் சென்னையில் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக குவியும் ரசிகர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைனில் மட்டும் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் பிசிசிஐ நிர்வாகத்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும், தமிழக கிரிக்கெட் வாரியத்தால் அல்ல என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்கள் இன்று பிற்பகலல் 12 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக  சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற மாநில ஐபிஎல் ரசிகர்களும் செம குஷியாகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்