வருகிறான் "இறைவன்"... ஜெயம் ரவி, நயன்தாரா.. செம ஹேப்பி!

Jun 08, 2023,01:03 PM IST
சென்னை: ஐ அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இறைவன் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், இயக்குநர் அகமதுவின் முந்தைய இரு படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் என்பதால்.

மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய இரு படங்களை இயக்கியவர் ஐ அகமது. அவரது அடுத்த படம் இறைவன். ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். இந்த இருவரும் இணைந்து நடித்த தனி ஒருவன் மாஸ் ஹிட் படம் என்பதால் இறைவன் படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளஆர்.



தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் ரிலீஸ் போஸ்டரே திரில்லாக உள்ளது. படத்தின் கதை பட்டையைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்பதை பட்டும் படாமலும் இதன் மூலம் இயக்குநர் சொல்லியுள்ளதாக அறிய முடிகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் அகமது கூறுகையில், இது வழக்கமான படமாக இருக்காது. எந்த வரையறைக்குள்ளும் இதை அடக்க முடியாத வகையில் இருக்கும். ஒரே மாதிரி படம் பண்ணுவதில் எனக்கும் கூட விருப்பம் இல்லை. புதிய பரிமாணத்தில் இறைவனை ரசிக்கலாம் என்றார். நடிகர் ஜெயம் ரவியும் இப்படம் குறித்து, எதிர்பாராத அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள்.. என்று கூறியுள்ளார்.

ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடியின் நடிப்பும், ஜோடிப் பொருத்தமும் தனி ஒருவனில் பிரமாதமாக இருந்தது. இப்படத்திலும் அவர்கள் பட்டாஸாக கலக்கியிருப்பார்கள் என்று நம்பலாம்... இறைவனுக்காக காத்திருப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்