Happy Birtday Ilaiyaraja.. "இசையின் ராஜா" பிறந்த நாள் இன்று!

Jun 02, 2023,09:19 AM IST

சென்னை : உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை இசையால் ஆண்டு கொண்டிருக்கும் இசையின் ராஜாவான இசைஞானி இளையராஜா இன்று தனது 79 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்திய சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்தவர் இளையராஜா.  மிக மிக சாதாரண பின்னணியிலிருந்து வந்து இசையின் உச்சம் தொட்டவர் இளையராஜா. குக்கிராமங்கள் முதல் கோபுர மாளிகை வரை இவரது இசை தொடாத இடமே இல்லை.. இவரது இசைக்கு வானமே எல்லை.



1970 கள் துவங்கி தற்போது வரை கிட்டதட்ட 50 ஆண்டுகள் இந்திய சினிமாவின் இசை உலகையே தன் வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் இதுவரை 7000 க்கும் அதிகமான பாடல்களை 1000 க்கும் அதிகமான படங்களுக்காக உருவாக்கி உள்ளார். இது தவிர 20,000 க்கும் அதிகமான மேடை கச்சேரிகள் செய்துள்ளார். ஐந்து முறை தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றவர் இளையராஜா.



பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். 1986 ம் ஆண்டே கமல் நடித்த விக்ரம் படத்திற்காக கம்ப்யூட்டரை பயன்படுத்தி இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை உடையவர் இளையராஜா. 2006 ம் ஆண்டு திருவாசகத்திற்கு சிம்பொனி இசையமைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையும் இளையராஜாவையே சேரும்.

இசை என்றாலே இளையராஜா என சொல்லும் அளவிற்கு வெஸ்டர்ன், கிளாசிக்கல், நாட்டுப்புற பாடல் என இசையின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி உலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளவர். 2013 ம் ஆண்டு இந்திய சினிமா 100 ஆண்டுகள் எட்டி பிடித்ததை கொண்டாடும் வகையில் பிபிசி நடத்திய சிறந்த இசையமைப்பாளர், ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பில் 48 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இளையராஜாவின் பெயரை குறிப்பிட்டிருந்தனர்.



இளையராஜாவின் இசை திறமையை பாராட்டி அவருக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அளித்தார். லண்டனின் ராயல் பில்ஹாமோனிக் ஆர்கெஸ்ட்ரா இவருக்கு மேஸ்ட்ரோ பட்டத்தை வழங்கியது. உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் இளையராஜாவிற்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்