தளபதி 67 ல் இணைகிறாரா கமல்... லோகியின் அடுத்த தரமான சம்பவம் லோடிங் !

Jan 26, 2023,01:55 PM IST
சென்னை: தளபதி 67 படத்தில் கமல்ஹாசன் நடிக்கலாம் என்று தகவல்கள்  கூறுகின்றன.


டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு தளபதி 67 என தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.  தளபதி 67 படத்தில் பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் சீயான் விக்ரம் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து கடைசியாக இயக்கிய விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர்கள் கவுதம் மேனன்,மிஷ்கின் ஆகியோரும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் மாஸ் தகவலாக, உலக நாயகன் கமலும், தளபதி 67 படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.



விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் சூர்யாவை ரோலக்ஸ் என்ற வில்லன் கேரக்டரில் களமிறக்கிய, படத்தை வேற லெவலுக்கு ஹிட் அடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். ரோலக்ஸ் மிரட்டலில் இருந்தே ரசிகர்கள் வெளியே வராத நிலையில் தற்போது தளபதி 67 படத்தில் விஜய், விக்ரம், கமல் என டாப் ஹீரோக்களை ஒன்றிணைத்து அடுத்த சம்பவத்திற்கு லோகேஷ் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

மாஸ்டரில் விஜய் சேதுபதியை வில்லனாக்கினார். இப்போது விக்ரமை வில்லனாக்க போகிறார். விக்ரம் படத்தில் கமல் - சூர்யா காம்போவில் தெறிக்க விட்டார். தளபதி 67 ல் இன்னும் என்னவெல்லாம் பண்ணி மிரட்ட போகிறாரோ லோகேஷ் கனகராஜ் என சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. தளபதி 67 பற்றி புதிய அப்டேட்டால் ட்விட்டரில் #Thalapathy67 ஹாஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

வாரிசு படம் வெளியான நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள்  பலர் நடிப்பதால் தளபதி 67 படம் ரசிகர்களுக்கு ஒரு திரை விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்