- ஆத்மிகா
பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 கட்சிகளின் எதிர்காலம் இதில் தீர்மானிக்கப்படவுள்ளது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றாலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காலையிலேயே ஆர்வமாக குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருந்தாலும் மூன்று கட்சிகளுக்குமே இது வாழ்வா - சாவா என்ற தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 13 வரை திக் திக் என்ற நிலையே உள்ளது.
பாஜக :
கர்நாடகாவின் பாஜக.,வை பொறுத்த வரை ஆளும் கட்சியாக இருந்தாலும், மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு, தேர்வு செய்து ஆட்சி அமைக்கவில்லை. கிட்டதட்ட 36 வருடங்களாக போராடியும் தென் மாநிலங்களில் பாஜக.,வால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. தென் மாநிலங்களில் பாஜக.,வின் பாட்சா பழிக்காது என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜக.,வால் மாற்ற முடியும்.
இந்த தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் 50 புதுமுகங்களுக்கு பாஜக வாய்ப்பு தந்துள்ளது. இதனால் பல மூத்த தலைவர் கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் பாஜக தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளது. 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு இதுவே அடித்தளமாக அமையும் என்பதால் பாஜக இந்த தேர்தலை அதிகம் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளது.
காங்கிரஸ் :
1991 ம் ஆண்டிற்கு பிறகு காங்கிரசால் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை. அந்த பெயரை இந்த தேர்தலில் காங்கிரஸ் மாற்றியே தீர வேண்டும். பாஜக தொடர்ந்த வழக்கால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது, நாடு முழுவதும் சமீபத்தில் ராகுல் காந்தி சென்ற யாத்திரை உள்ளிட்டவைகள் அனுதாப ஓட்டுக்களாக மாறி, காங்கிரசிற்கு பலம் சேர்க்குமா, மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்பது இந்த தேர்தலில் காங்கிரசிற்கு கிடைக்கும் ஓட்டு சதவீதத்தில் தெரிந்து விடும். ஆளும் பாஜக மீது காங்கிரஸ் முன்வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் எடுபடுமா என்பது தெரியும்.
மதசார்பற்ற ஜனதா தளம் :
பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு போட்டியாக மாநில கட்சி என்ற பலத்துடன் களத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம்.இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி, சொல்லிக் கொள்ளும் படியான ஓட்டு சதவீதத்தை பெற்றாலோ அல்லது தேசிய கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஓட்டுக்கள் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து கர்நாடகாவில் கட்சியை நடத்த முடியும். இல்லாவிட்டால் லெட்டர்பேடு கட்சியாக மாறி விடும் நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளது. இதனால் தனது பலத்தை நிரூபித்தே தீர கட்டாய நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}