கர்நாடகாவில் தொங்கு சட்டசபை?... கருத்து கணிப்புக்களை ஏற்க மறுக்கும் கட்சிகள்

May 11, 2023,09:21 AM IST
பெங்களூரு : கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைவதற்கே வாய்ப்புள்ளதாக 10 ல் 5 கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கருத்துக் கணிப்புக்களை ஏற்க காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் மறுத்து வருவதுடன், தாங்கள் பெரும்பான்மை வெற்றியை பெறுவோம் என கூறி வருகின்றன.

கர்நாடக சட்டசபையில் உள்ள 224 இடங்களுக்கான தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் மே 13 ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 



ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 10 க்கு 5 கருத்து கணிப்புக்கள் தொங்கு சட்டசபையே அமையும் என சொல்கின்றன. அதே சமயம் காங்கிரஸ் வெற்றி பெறும் என இரண்டு கருத்து கணிப்புக்களும், பாஜக வெற்றி பெறும் என ஒரு கருத்து கணிப்பும் தெரிவிக்கின்றன. ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் கிங்மேக்கராக இருக்கும் என்பதால் தொங்கு சட்டசபையே அமையும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தியா டிவி, சிஎன்எக்ஸ், ஜீ நியூஸ் ஆகியன நடத்திய கருத்து கணிப்புக்களின் படி காங்கிரசிற்கு பெரும்பான்மை பலமான 113 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. நியூஸ் நேஷன் - சிஜிஎஸ் கருத்து கணிப்புக்கள் பாஜக 117 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என சொல்கின்றன. பாஜக பெரும்பான்மையை பெரும். காங்கிரஸ் 86 இடங்களிலும், ஜெடிஎஸ் 21 இடங்களிலும் வெற்றி பெறும் என சொல்கின்றன.

ஐந்து கருத்து கணிப்புக்கள், காங்கிரஸ் வெற்றி பெற்று, தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் என சொல்கின்றன. இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பின் படி காங்கிரஸ் 122 முதல் 140 இடங்களையும், பாஜக 62 முதல் 80 இடங்களையும் கைப்பற்றும். 

டைம்ஸ் நவ் - இடிஜி நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் பெரும்பான்மையை பெரும். 113 இடங்கள் வரை கைப்பற்றும். பாஜக 85 இடங்களை கைப்பற்றும். ஜெடிஎஸ்சிற்கு 23 இடங்கள் கிடைக்கும் என சொல்கிறது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 85 - 100 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் 94 - 108 இடங்களையும், ஜெடிஎஸ் 24-32 இடங்களையும் கைப்பற்றும்.

2006, 2018 ஆகிய ஆண்டுகளில் குமாரசாமியால் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. 2018 ல் காங்கிரசுடன் இணைந்து பாஜக.,வை ஆட்சியில் இருந்து விரட்டினார். பிறகு சில மாதங்களில் அந்த ஆட்சியும் கவிழ்ந்தது. அதனால் இந்த முறை எந்த கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைப்பார் என கணிக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் குமாரசாமியின் முடிவை பொறுத்தே கர்நாடகாவில் புதிய ஆட்சி அமையும் என்பது மட்டும் கருத்து கணிப்பு முடிவுகளால் உறுதியாகி உள்ளது.

வழக்கம் போல எந்தக் கஷ்டமும் இல்லாமல் குமாரசாமி முதல்வராகப் போகிறாரா அல்லது டிகே சிவக்குமார் முதல் முறையாக முதல்வராவாரா அல்லது கர்நாடகத்தில் மீண்டும் தாமரை மலருமா என்பதை மே 13ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்