பார்த்துட்டே இருங்க.. ஒரே வருடத்தில் கர்நாடக அரசு கவிழும்.. அண்ணாமலை சாபம்!

May 21, 2023,12:45 PM IST
சென்னை: கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரே வருடத்தில் கவிழும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கர்நாடத்தில் சித்தராமையா தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், 8 அமைச்சர்களுடன் பதவியேற்றுள்ள இந்த அரசு ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டுள்ளது.

முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா பேசுகையில், முந்தைய  பாஜக அரசை கடுமையாக சாடினார். பொம்மை அரசு எந்தவிதத்திலும் பயனுள்ளதாக இல்லை. மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியை பெற்றுத் தரவில்லை. மக்களுக்கும் எதையும் செய்யவில்லை என்று சாடியிருந்தார்.




இதற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ். பொம்மை பதில் தருகையில், ஆளுங்கட்சியின் அறிவிப்புக்கும், அதன் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது. சொன்னது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது.

இப்படி இருக்கையில் சித்தராமையா அரசு ஒரே வருடத்தில் கவிழ்ந்து விடும் என்று அண்ணாமலை அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றிலிருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த அரசு கவிழும். பார்த்துக் கொண்டே இருங்கள். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவர்களுக்கு நோபல் பரிசு தரலாம். காரணம், அந்த அளவுக்கு அவர்களது டிசைன் உள்ளது.

சித்தராமையா மட்டுமல்ல, சிவக்குமாரும் கூட முதல்வராக இருப்பார். இந்த இருவருக்கும் ஆளுக்கு பத்து அமைச்சர்களாம். என்ன மாதிரியான அரசு இது.  இவர்களுக்குள் முதலில் ஒற்றுமை இல்லை. இவர்கள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்கள். காங்கிரஸுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை இல்லையே.  மேலும் இவர்களது பதவியேற்பு விழாவுக்கு மமதா பானர்ஜி வரவில்லை, அரவிந்த் கெஜ்ரிவால் வரவில்லை பிறகு எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்