செந்தில் பாலாஜி கைது..  "பாஜக மீண்டும் அத்துமீறல்".. ஜோதிமணி கடும் பாய்ச்சல்

Jun 14, 2023,12:20 PM IST

கரூர்: தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதற்கு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு கைது செய்திருப்பதற்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. 




கரூரைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜோதிமணியும் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்துள்ளார். கரூர் எம்.பி தேர்தலின்போது ஜோதிமணி வெற்றிக்காக மிகத் தீவிரமாக பாடுபட்டவர் செந்தில் பாலாஜி. அதேபோல  செந்தில் பாலாஜிக்காக எம்எல்ஏ தேர்தலில் தீவிரமாக வாக்கு சேகரித்தவர் ஜோதிமணி என்பது நினைவிருக்கலாம்.


செந்தில் பாலாஜி குறித்து ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில், அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்தப்பட்டு, நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.


தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய, பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைதுசெய்ய வேண்டிய அவசரம் ஏன்?


எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், அமைச்சர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

சமீபத்திய செய்திகள்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

அதிகம் பார்க்கும் செய்திகள்