சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் லீக்கில் இது 17வது ஐபிஎல் தொடராகும். இந்த ஐபிஎல் சீசன் எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடர், தோனி கேப்டனாக களமிறங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றிய தகவல்களை அவ்வப்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தீபக் சாகர், முகேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் சென்னை வீரர்களின் ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
தற்போது, சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி குறித்து வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரீனா கைஃப் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}