இது யாருன்னு தெரியுதா?.. பிரிட்டனில் உல்லாசமாக வாழும் தேடப்படும் இந்திய குற்றவாளி!

Jul 12, 2023,04:14 PM IST
லண்டன் : இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிங்ஸ் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, பிரிட்டனில் பெரும் பணக்காரர்கள் பங்கேற்றும் சில்வர்ஸ்டன் பகுதியில் கார் ரேசை உல்லாசமாக பார்த்து மகிழ்ந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. 

இந்த ரேஸ் நடக்கும் இடத்தில் நாய் ஒன்றுடன் ஜாலியாக பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார் பெண் பத்திரிக்கையாளர். இந்த வீடியோவின் பின்னணியில் விஜய் மல்லையாவும், அந்த நாயின் உரிமையாளரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. அது மட்டுமல்ல நாயிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வினோத காட்சியையும் விஜய் மல்லையா தனது போனில் வீடியோ எடுத்துள்ளார்.




பிரிட்டிஷி ஜிபி.,யில் விஜய் மல்லையா ஜாலியாக உலா வருவது இது முதல் முறையல்ல. இது நடக்கும் ஃபார்முலா ஒன் கார் ரேசை பார்ப்பதற்கு விஜய் மல்லையா வழக்கமாக வருவாராம். அவரின் ஃபோர்ஸ் இந்தியா டீமும் இதில் பங்கேற்கும். இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் அதிக பண மோசடி செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளார். ரூ.9000 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இங்கிலாந்தில் படு ஜாலியாக தனது வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டுதான் உள்ளார் விஜய் மல்லையா.. இதுவரை அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் எந்த முயற்சியும் பலன் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்