அட்லான்டா: அமெரிக்காவில் திருடர்களைத் துரத்திக் கொண்டு போன தனது நிறுவன ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளார் லூலுலெமோன் நிறுவன தலைமை செயலதிகாரி கால்வின் மெக்டொனால்ட்.
அமெரிக்காவில் பிரபலமாக உள்ள விற்பனையகம்தான் லூலுலெமோன். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் ஏராளமான கடைகள் உள்ளன. அட்லாண்டாவில் உள்ள ஒரு விற்பனையகத்தில் கடந்த மாதம் திருடர்கள் புகுந்து விட்டனர்.
இதையடுத்து கடையில் பணியில் இருந்த ஒரு பெண் மேலாளர் உள்ளிட்ட 2 பெண் ஊழியர்கள் திருட்டைத் தடுக்க முயன்றனர். இதனால் திருடர்கள் வெளியில் தப்பித்து ஓடினர். அந்த இரு பெண்களும் துணிச்சலாக திருடர்களை விரட்டிக் கொண்டு போனார்கள்.. ஆனால் அந்த இரு பெண்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளார். நிறுவன தலைமை செயலதிகாரி கால்வின் மெக்டொனால்ட்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கால்ட்வின்னின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தான் செய்தது சரியே என்று கூறியுள்ளார் கால்வின். இதுகுறித்து அவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், நிறுவனத்தின் விதிமுறையை அவர்கள் மீறியுள்ளனர். திருட்டு நடந்தால் அதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது. திருடர்களுடன் மோதக் கூடாது. ஒவ்வொரு கடையிலும் சிசிடிவி கேமரா உள்ளது. போலீஸார் உள்ளனர். சட்டம் உள்ளது. அது பார்த்துக் கொள்ளும்.
இது ஊழியர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதைக் காக்கவே நாங்கள் முயல்கிறோம். பல இடங்களில் திருடர்களுடன் மோத முயன்று பலர் காயமடைந்துள்ளனர், ஏன் உயிரிழப்பே கூட ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலை எங்களது ஊழியர்களுக்கு நேரிடக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். ஊழியர்களின் பாதுகாப்பே முதன்மையானது. அதை யாராவது மீறினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் கால்வின்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}