முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட ஸ்டாலின்.. சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது!

May 25, 2023,11:20 AM IST
சிங்கப்பூர் : முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்டு விட்டு, அங்குள்ள தமிழ் மக்களுடன் உரையாடி உள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சிஇஓ.,க்களை சந்திக்கும் முதல்வர், 2024 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தார். 



சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தின் மன்னார்குடியில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவிற்கு சிலையும், நினைவு நூலகமும் அமைந்துள்ளது. 

லீ குவான், திராட முன்னேற்ற கழக நிறுவனரான அண்ணாதுரையின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர். அண்ணாத்துரைக்கு அவர் விருந்தும் அளித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் பட்டுக்கோட்டை, பரவக்கோட்டை, திருமக்கோட்டை, மேலதிருப்பால்குடி, கீழ திருப்பால் குடி, நெடுவன்கோட்டை, மேலவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான் என்றார்.

சிங்கப்பூர்  பயணத்தின் போது லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள முருகன் இட்லி கடையில் டீ சாப்பிட்ட படி அங்கிருந்த தமிழர்களுடன் கலந்துரையாடினார். ஸ்டாலினின் இந்த செம ஜாலியான சுற்றுப் பயண போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. 

முன்னதாக சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது மதுரைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் கோரிக்கை வைத்தார். அதுகுறித்து மத்தியஅரசுடன் பேசுவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வுடன் ஸ்டாலினின் சிங்கப்பூர் நிகழ்வுகள் முடிவடைந்தன.இன்று வேறு எந்த சந்திப்புக்களும் கிடையாது. மாலை அவர் ஜப்பானின் ஒசாகாவிற்கு புறப்பட உள்ளார்.இன்று இரவு ஒசாகா நகரை சென்றடைய உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்