உங்க வயசுக்கு இதெல்லாம் செஞ்சிருக்கக் கூடாது.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய தயாரிப்பாளர்!

Jul 04, 2023,04:14 PM IST
சென்னை: ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து மாவீரன் படம் குறித்து நெகட்டிவாக டிவீட் போட்டு வந்த நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, அவரை நாகரீகமாக கண்டித்து பதில் டிவீட் போட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மாவீரன். இந்தப் படத்தையும் சிவகார்த்திகேயனையும் தொடர்ந்து கிண்டலடித்து டிவீட் போட்டுக் கொண்டிருக்கிறார் திரைப்பட யூடியூப் விமர்சகரான ப்ளூசட்டை மாறன். இது சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினி போல தன்னை சிவகார்த்திகேயன் நினைத்துக் கொள்வதாக கூறி அவரை விமர்சித்துள்ளார் ப்ளூசட்டை மாறன்.  அவர் போட்ட ஒரு டிவீட்டில், நான் ரஜினி சார் அளவிற்கு இல்லை. அவர் பெரிய லெவல். நான் நானாகவே இருப்பேன் - மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்தி தன்னடக்க பேச்சு.  நான் நானாகவே இருப்பேன். ஆனா டைட்டில் மட்டும்... கேடி பில்லா கில்லாடி ரங்கா, வேலைக்காரன், ரஜினிமுருகன், மாவீரன் என்று கிண்டலடித்திருந்தார்.

இன்னொரு டிவீட்டில், ரஜினி சிறப்பாக நடித்த ப்ளாக் & ஒயிட் படங்கள், முள்ளும் மலரும்,, எங்கேயோ கேட்ட குரல், 6 ல் இருந்து 60 வரை, அண்ணாமலை என பெரிய லிஸ்ட் உண்டு.  அவரோடு இவரை ஒப்பிடுவது பெரும் நகைச்சுவை. முடியல சாமி..முடியல என்று கிண்டலடித்திருந்தார்.

அதேபோலஅப்படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு மீம் போட்டுள்ளார் மாறன்.  அதில், மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்... 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது. 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' மொமன்ட் என்று கிண்டலடித்திருந்தார்.



இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா பதிலடி கொடுத்துள்ளார். அவர்  இதுதொடர்பாக போட்டுள்ள ட்வீட்டில், வணக்கம் சார். நான் அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட ப்ரடியூசர் சார். எனக்கு என் படம்தான் சார் மிஷன் இம்பாசிபிள், அவதார், ஆர்ஆர்ஆர் எல்லாமே. உங்க வயசுக்கு இப்படி ஒரு பிக்சர் ஷேர் பண்ணி நீங்க இதை பண்ணிருக்க வேணாம் சார் என்று  கூறியுள்ளார் அருண் விஸ்வா.

சிவகார்த்திகேயனை குறி வைத்து ஏன் இப்படி தொடர்ந்து ப்ளூசட்டை மாறன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த பஞ்சாயத்துக்கு முன்பு மாமன்னன் படத்தை வைத்தும் திமுகவினரை கலாய்த்துக் கொண்டிருந்தார் மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்