அமித் ஷாவை விளையாட்டுத் துறைக்கு மாத்திருங்க.. சுப்பிரமணியம் சாமி!

Jun 18, 2023,11:12 AM IST
டெல்லி: மணிப்பூர் மாநில பாஜக  ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதை விட முக்கியமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, விளையாட்டுத்துறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் நக்கலடித்துள்ளார்.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை தலைவிரித்தாடுகிறது.  அரசியல்வாதிகளைக் குறி வைத்து ஒரு தரப்பு மக்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. மத்திய அமைச்சர்களின் வீடுகளும் தப்பவில்லை. பாஜக அலுவலகமும் அடித்து சூறையாடப்பட்டுள்ளது.




மக்களின் இந்தப் போராட்டத்தைத் தடுக்க முடியாமல், முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் மணிப்பூர் மாநில பாஜக அரசு கடுமையாக தத்தளித்து வருகிறது. போலீஸார், துணை ராணுவப் படையினர், ராணுவத்தினர் என பல தரப்பினரும் கலவரத்தைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக, கவனித்து வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க முடியாம, அந்த மாநில பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம் சாமி. இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், பாஜக மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய இதுதான் சரியான நேரம். அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும். அமித் ஷாவை உடனடியாக விளையாட்டுத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

சுப்பிரமணியம் சாமி பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தொடர்ந்து பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என முன்னணித் தலைவர்களை சாடுவதும், விமர்சிப்பதுமாகவே உள்ளார். யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லை என்றாலும் கூட அவர் விடுவதாக இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்