அடேய்...யாருடா நீங்க? பட அறிவிப்பே வரல...அதுக்குல மொத்த கதையையும் சொல்றீங்க

Jan 22, 2023,03:21 PM IST
சென்னை :  விஜய் நடிக்கவுள்ள அவரது 67 படத்தின் கதையே இதுதான் என்று சிலர் சமூக வலைதளங்களில் கதை அடிக்க ஆரம்பித்துள்ளனர்.



கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். அடுத்தபடியாக விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் படங்களை இயக்கி மாஸ் ஹிட் கொடுத்தார். இவர் அடுத்தபடியாக கமலுடன் விக்ரம் 2, சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படம், கைதி 2, ரோலக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க போகிறார் என பல படங்களை லோகேஷ் கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் விஜய்யின் 67 வது படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக தகவல் வந்ததால் எந்த படத்தை லோகேஷ் முதலில் துவக்குவார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக லோகேஷ் கனகராஜ், விஜய் இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வர உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. 

விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கையில், படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக பல மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறது. "கைதி கார்த்தி கூட ஜெயில்ல இருந்தவர் தான் விஜய்...ஏஜென்ட் விக்ரமோட ஸ்டூடென்ட் தான் விஜய்... ரோலக்ஸ் விட பயங்கரமான வில்லன் தான் விஜய் கேரக்டர்" என பல விதமாக ஒரே வரியில் படத்தின் கையை சொல்லி வருகிறார்கள்.

கமல் நடித்த விக்ரம் படத்தின் இறுதியில் கைதி பட கேரக்டர்களை இணைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். இது தான் கைதி 2 படத்தின் துவக்கம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் கைதி 2 படத்தில் சூர்யா தான் வில்லனா? அப்போது விக்ரம் 2 கதை என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் அனைத்து படங்களின் கதையையும் மிக்ஸ் செய்து, பல கோணங்களில் யோசித்து தளபதி 67 படத்தின் கதையை மீம் கிரியேட்டர்கள் கூறி வருகின்றனர்.

தளபதி 67 படம் பற்றிய மீம்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அறிவிப்பே வராத படத்திற்கு இத்தனை விதமான கதையா என பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்