பொவன்டோ நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி... அலறும் பெப்சி, கோக்!

Apr 14, 2023,04:00 PM IST
டில்லி : ஆசியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானி, சமீபத்தில் குளிர்பான உற்பத்தி துறையில் தடம் பதித்தார். புதிதாக Campa என்ற பிராண்டை அறிமுகம் செய்தார். இது வெளிநாட்டு குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களான பெப்சி மற்றும் கோகா கோலா நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

பொதுவாக முகேஷ் அம்பானி ஒரு புதிய தொழிலை துவங்குகிறார் என்றால் மிக குறைந்த விலையில் ஒரு பிராண்டினை அறிமுகம் செய்து, அந்த துறையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களை அடித்து காலி செய்வார். அதே யுக்தியை தான் இப்போதும் கையாண்டுள்ளார்.  தனது போட்டி நிறுவனங்களை விட 30 சதவீதம் குறைந்த விலையில் Campa பிராண்ட் குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளார். இதனால் பெப்சி, கேக்க கோலா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விலையை குறைத்து வருகின்றன.



ஆரம்பத்தில் Campa வை அறிமுகம் செய்யும் போது அது மட்டுமே விலை குறைவாக இருந்ததால் அது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது மற்ற நிறுவனங்களும் விலையை குறைத்து விட்டதால் முகேஷ் அம்பானிக்கு அது பிரச்சனையாக மாறி உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த இந்திய மார்கெட்டிற்கும் ஏற்ற வகையில் குளிர்பானத்தை Campa வால் உற்பத்தி செய்ய முடியவில்லை. அதோடு நாட்டின் பல பகுதிகளில் இவர்களின் குளிர்பானத்திற்கு விநியோகஸ்தரர்களும் இல்லை. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் இதை கொண்டு சேர்க்க முடியவில்லை.

இதனால் குறைந்த விலை யுக்தி மட்டும் போது என நினைத்துள்ள ரிலையன்ஸ், மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் குளிர்கால நிறுவனங்களை விலைக்கு வாங்கியோ அல்லது அவர்களுடன் கூட்டணி வைத்தோ தங்களின் தயாரிப்புக்களை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளது.

இதனால் சென்னையை சேர்ந்த காளி ஏரோடட் வாட்டர் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காளி ஏரோடட் வாட்டர் ஒர்க்ஸ் பிரபலமான பொவன்டோ, காளிமார்க் சோடா ஆகியவற்றை தயாரித்து, மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. காளி நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகளை வாங்க கடந்த ஆண்டே ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. 

இந்நிலையில் தற்போது தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட வேலைகளையும் காளி நிறுவனமே செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில் தென்னிந்தியாவில் உள்ள காளி நிறுவனத்திற்கு சொந்தமான 8 ஆலைகளில் Campa பிராண்ட் குளிர்பானங்கள் தயாரிப்பு மற்றும் விநியோக பணிகள் விரைவில் துவங்கப்படலாம். 

இருந்தாலும் தங்களின் பிரபல தயாரிப்புக்களான பொவன்டோ, காளிமார்க் சோடா ஆகியவற்றையும் தொடர்ந்து உற்பத்தி செய்ய காளி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. புதிய ஜூஸ், தண்ணீர் விற்பனை தொழில் துவங்கப்பட்டால் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் முக்கிய நிறுவனமாக காளி நிறுவனம் மாறும். 

காளி நிறுவனம் 1916 ம் ஆண்டு பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்டது. காளி கோல்ட் டிரிங்க் கம்பெனி என்ற பெயரில் துவங்கப்பட்டது தற்போது நான்காவது தலைமுறையாக இயங்கி வருகிறது. காளி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது பற்றி காளி நிறுவனமோ, ரிலையன்ஸ் நிறுவனமோ இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்