புயலைக் கிளப்பிய "பார்பி".. வியட்நாமைத் தொடர்ந்து.. பிலிப்பைன்ஸ் நாடும் தடை!

Jul 06, 2023,10:00 AM IST
லாஸ் ஏஞ்சலெஸ்:  புயலைக் கிளப்பியுள்ள பார்பி படம் அடுத்தடுத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம்தான் பார்பி.  மார்காட் ராபி, பார்பி வேடத்தில் நடித்துள்ளார். ரியான் காஸ்லிங் கென் கேரக்டரில் நடித்துள்ளார். கிரேட்டா கெர்விக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம் இப்படத்தில் "Nine-dash line" மேப் இடம் பெற்றிருப்பதே.
 


"Nine-dash line" என்பது தென் சீனக் கடலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு அருகே சீனா போட்ட எல்லைக் கோடாகும். இந்த மேப்பை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.  இதுதொடர்பாக சர்வதேச கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்து  தடை வாங்கி விட்டன. ஆனால் அந்தத் தீர்ப்பை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த சர்ச்சைக்குரிய மேப்பைத்தான் பார்பி படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் கோபமடைந்துள்ளன.முதல் நாடாக  வியட்நாம் பா��்பி படத்தைத் தடை செய்தது.அடுத்து பிலிப்பைன்ஸும் தடை செய்கிறது. தடை செய்ய வேண்டாம் என்றும் திரையிட அனுமதிக்குமாறும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

யு வடிவிலான இந்த "Nine-dash line" லெவன் டேஷன் லைனாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கோடுகள் உள்ள இடங்களையெல்லாம் சீனா உரிமை கோருகிறது. தைவான், பாரசல் தீவுகள், ஸ்பார்ட்லி தீவுகள், பரதாஸ் தீவுகள், வெரகர் பாங்க்ஸ், மெக்கல்ஸ்பீல்ட் பேங்க்ஸ், ஸ்கார்போரோ ஷோவல் ஆகியவையே சீனா உரிமை கோரும் பகுதிகள் ஆகும். இவை தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சொந்தமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்