6 முஸ்லீம் நாடுகளை குண்டு வீசித் தகர்த்தவர் ஒபாமா.. நிர்மலா சீதாராமன் தாக்கு!

Jun 26, 2023,09:33 AM IST
டெல்லி: பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது 6 முஸ்லீம் நாடுகளை குண்டு வீசித் தகர்த்தவர். அந்த நாடுகள் மீது 26,000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அவர், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குறித்து கவலைப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியின்போது, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவில் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுண்டு போகும் என்று தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். அப்போது பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒபாமாவின் பேட்டிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு படி மேலே போய் ஹுசேன் ஒபாமா என்று அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒபாமாவின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், நமது பிரதமர், அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், தனது அரசு அனைத்து மக்களுக்குமானது, அனைவரின் வளர்ச்சிக்குமானது என்பதை தெளிவாக விளக்கினார். எந்த ஒரு பிரிவு மக்களும் இங்கு பாரபட்சமாக நடத்தப்படவில்லை என்பதையும் விளக்கினார். ஆனாலும் இதையும் தாண்டி, எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒன்றை சிலர் பிரச்சினையாக்கப் பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளும் 13 விருதுகள் கொடுத்துள்ளன. அதில், 6 விருதுகள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகள் ஆகும். 

நமது பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு அதிபரை சந்தித்து வந்த நிலையில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர், நமது பிரதமர் குறித்துப் பேசியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.  இதுகுறித்து நான் எச்சரிக்கையுடன் பேச விரும்புகிறேன். காரணம், இரு நாடுகளின் உறவைப் பாதுகாப்பது முக்கியம். நமக்கு அமெரிக்காவின் நட்பு வேண்டும். அதேசமயம், இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து யாரேனும் கருத்து தெரிவித்தால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது நமது கடமை.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள 6 நாடுகளில் மிகப் பெரிய அளவில் நடந்த குண்டுவீச்சுகளுக்குக் காரணமானவர் இந்த முன்னாள் அதிபர். அந்த நாடுகள் மீது 26,000 குண்டுகள் வீசி நாசமாக்கப்பட்டன.  இப்படிப்பட்ட நிலையில், இவரது கவலையை, அக்கறையை யார் நம்புவார்கள்.. எப்படி நம்ப முடியும்?

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளை எதிர்த்து வெல்ல முடியாது என்பதால் மதத்தின் பெயரால் நமது  பெயரைக் கெடுக்கும் முயற்சியாகவே இதை நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்