அதானி நிறுவன கடன் விபரங்களை வெளியிட முடியாது...அடித்துச் சொன்ன நிர்மலா சீதாராமன்

Mar 13, 2023,03:46 PM IST

புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு மார்ச் 13 ம் தேதியான இன்று துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கருத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால் அதானி குழும விவகாரங்களை திசை திருப்புவதற்காக தான் பாஜக அரசு, ராகுலின் பேச்சை கையில் எடுத்திருப்பதாக காங்கிரசாரும் குற்றம்சாட்டினர்.



இரு கட்சி உறுப்பினர்களும் அமளி செய்ததால் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல்கள் முடங்கின. லோக்சபாவின் இன்றைய அமர்வில் அதானி குழும ஊழல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அமளிக்கு இடையிலும் அதானி குழு கடன் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி குழுமம் மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மேலும், எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்திற்கு வழங்கி மொத்த கடன் தொகை 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 6,347.32 கோடியாக இருந்தது. 2023 ம் ஆண்டு மார்ச் 05 ம் தேதி நிலவரப்படி இது 6182.64 கோடியாக குறைந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


நிர்மலா சீதாராமனின் இந்த பதில் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் பார்லிமென்ட்டின் இரு அவைகளும் மார்ச் 14 ம் தேதியான நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்