அத்துமீறி வந்தா சுட்டுப்புடுவோம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!

Jul 10, 2023,10:14 AM IST
பியாங்யாங்: வட கொரியாவின் வான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி கண்காணிப்பை மேற்கொண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தள்ளது.

தேவையில்லாமல் தங்களது எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறியதாகவும், இதை உடனே நிறுத்திக் கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் வட கொரியா கூறியுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்தால் கடுமையான தாக்குல் தொடுக்கப்படும். அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளவும் தயங்க மாட்டோம். அப்படி நடந்தால் அது அணு ஆயுதப் பயன்பாட்டில் போய் முடியும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானங்களையும், டிரோன்களையும் ஏவி வட கொரியாவை உளவு பார்க்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மட்டுமல்லாமல், இப்பிராந்தியத்தின் அமைதியையும் சேர்த்தே கெடுக்கும். 

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் வட கொரியா கட்டுப்பாடு காக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த காலங்களை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார் அவர். வட கொரியாவின் இந்த எச்சரிக்கை குறித்து  இதுவரை அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்