புதுடில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அது குறித்து ஆலோசனை செய்வதற்காக பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. மத்தியசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி நேற்று ஒரே நாளில் 1134 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7026 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி சட்டீஸ்கர், டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் வீதம் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதனை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக உயர்மட்டக் குழு உடனான ஆலோசனை கூட்டத்தை பிரதம் மோடி கூட்டி உள்ளார். இன்று மாலை 04.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}