பைடனுக்கு புத்தகம்... ஜில் பைடனுக்கு வைரம்.. அமெரிக்க பயணத்தில் அசத்தும் மோடி

Jun 22, 2023,12:29 PM IST
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுக்கு சூப்பரான கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மோடியை வரவேற்பதற்காக வெள்ளை மாளிகையில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் உள்ளது.



மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின கொண்டாடத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், யோகா பயிற்சி செய்தார். ஐநா தலைமையகத்தில் நடந்த இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து டெக்ஸா நிறுவனர் எலன் மாஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர் பலரையும் மோடி சந்தித்து பேசினார்.

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் இடம்பிடித்துள்ள உணவு வகைகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடனே தனது நேரடி கண்காணிப்பில் இந்த உணவுகளை பிரத்யேகமாக தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.



வெள்ளை மாளிகைக்கு சென்ற மோடி,  அதிபர் பைடனுக்கு அவரின் 80 ஆண்டு கால வாழ்க்கையை குறிக்கும் வகையில் 10 பொருட்களை பரிசாக வழங்கி உள்ளார். அதில் 10 அம்சங்களைக் கொண்ட உபநிஷத்துக்களின் முதல் பகுதி புத்தகமும் ஒன்று. இந்த புத்தகத்தை பைடனுக்கு மிகவும் பிடித்த கவிஞர் டபிள்யூ பி இயட்ஸ் எழுதி உள்ளார்.

இதே போல் பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் அளவிலான வைரம் ஒன்றை மோடி பரிசளித்துள்ளார். இந்த வைரம், ரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாகும். சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றின் சக்தியை உள்ளடக்கிய வைரம் என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது என்பது தான் இந்த சிறப்பம்சமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்