சென்னை: நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரைப்பட நடிகர்கள், குறிப்பாக உச்சநடிகர்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ரஜினிகாந்த் முதல் கொண்டு பல நடிகர்களுக்கும் இந்தக் கோரிக்கையை வைத்து வருகிறது பாமக. ரஜினிகாந்த் இந்தக் கோரிக்கையை ஏற்று புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்க்கு இதே கோரிக்கையை வைத்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}