இஸ்லாமாபாத் : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் பிரதமர் ஆக வேண்டும் என இறைவனிடம் வேண்டுவதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பேசி உள்ள வீடியோ ஒன்று பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் செம டிரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தான், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு விண்ணை முட்டுவதாக உயர்ந்துள்ளது. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த யூட்யூப் சேனல் ஒன்று, அந்நாட்டு மக்கள் சிலரிடம் தற்போதைய நிலை குறித்து கருத்து கேட்டுள்ளது. இதில் பேட்டி அளித்த இறைஞர் ஒருவர், பாகிஸ்தானின் தவறான பொருளாதார கொள்கை, நிர்வாக திறமையின்மையால் இன்று மக்கள் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டு உள்ளனர். இதனால் எங்களின் குழந்தைகளுக்கு போதிய உணவு கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
இந்திய பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி. சிறந்த மனித நேயம் மிக்கவர். அவருடைய ஆட்சியின் கீழ் வாழ விரும்புகிறோம். பாகிஸ்தானையும் மோடி ஆள வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறோம். எங்களுக்கும் மோடி போன்ற பிரதமர் வேண்டும். அவர் மட்டும் பாகிஸ்தான் பிரதமராக இருந்திருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார். பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பிடும் போது மோடியின் ஆட்சி சிறப்பானதாக உள்ளது.
இந்திய மக்கள் ஒரு கிலோ தக்காளி ரூ. 20, ஒரு கிலோ சிக்கன் ரூ.150, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50 என்ற நியாயமான விலைக்கு பொருட்களை பெறுகிறார்கள். பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக நாம் இஸ்லாமிய நாட்டில் உள்ளோம். ஆனால் இஸ்லாம் என்ற அடையாளத்தை கூட வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். நமக்கும் மோடி போன்ற ஒருவர் பிரதமராக கிடைத்திருந்தால் பெனாசிர், முஷாரப், இம்ரான் போன்ற யாரும் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இளைஞரின் இந்த வீடியோ பாகிஸ்தானிலும் லைக்குகளை அள்ளி, வைரலாகி வருகிறது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}