சென்னை: பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிக் குழந்தைகள் ஜாலியாக கார்ட்டூன் பாருங்க என்று பிரேம்ஜி அமரன் ஒரு டிவீட் போட அதற்கு ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் வழக்கமாக வெயிலுக்குத்தான் லீவு விடுவார்கள். ஆனால் இப்போது கன மழைக்கு லீவு விட்டிருப்பது பள்ளிக் குழந்தைகளுக்கு செம குஷியைக் கொடுத்துள்ளது. இந்த குதூகல களேபரத்துக்குள் தன்னையும் வாலன்டியராக இணைத்துக் கொண்டு ஜாலி செய்துள்ளார் நடிகர் பிரேம்ஜி அமரன்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று பள்ளிகளுக்கு லீவு.. எல்லோரும் வீட்டிலேயே இருங்க.. கார்ட்டூன் பாருங்க. ஜாலியா வீடியோ கேம்ஸ் விளையாடுங்க என்று கூறியுள்ளார் பிரேம்ஜி. விடுவார்களா ரசிகர்கள்.. கமெண்ட்டுகளுடன் வந்து குவிந்து விட்டனர்.
ஜான் ஸ்னோ என்பவர் போட்டுள்ள கமென்ட்டில், கார்ட்டூன் எங்க சார் பாக்குறாங்க ...எங்க உயிர தான் எடுக்குதுங்க ...கல்யாணம் பண்ணுங்க சார்,லைப் நல்லா இருக்கும் என்று புலம்பியுள்ளார்.
பார்த்திபன் என்பவரோ, இப்படியே மழை பெஞ்சா கிரவுண்டு ஈரமாயிடும். ஈவ்னிங் எப்படி கிரிக்கெட் ஆட்ரறது. ஒரு பத்து மணி வரைக்கும் பெஞ்சுசட்டு நின்னுட்டா நல்லாருக்கும் என்று கவலைபட்டுள்ளார்.. கூடவே கண்ணடித்து வைத்துள்ளார்.. ஒரு வேளை டபுள் மீனிங்கில் பேசியிருப்பாரோ!
அருண் பார்த்திபன் என்பவரோ, மறந்து கூட ஆதிபுருஷ் பாக்க போய்டாதீங்கன்னு சொல்றீங்க.. அதானே தலைவா என்று வாரியுள்ளார்.
ஆக மொத்தம் பிரேம்ஜி அமரன் இன்னும் கார்ட்டூன் மட்டும்தான் பாத்திட்டிருக்கார் போல.. பிறகெப்படி தலைவா!!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}